அப்பா இனிக்கு காலைல என்கூட பேசும்போது, அவரோட கல்லூரி காலத்துல நடந்த ஒரு சுவையான சம்பவத்த என்னோட பகிர்ந்துக்கொண்டார். அவர் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போது ஏற்ப்பட்ட சம்பவம் அது.
பொதுவாக நன்றாக படிக்கின்ற மாணவர்களுள் எங்கப்பாவும் ஒருவர். அப்பா
கிட்டத்தட்ட இவரோட செல்ல பிள்ளைஎன்றே சொல்லலாம். வாத்தியாருக்கு மிகவும் பிடித்த மாணவர்களை அவர்களின் பிள்ளைகளைப் போலவே நினைத்துகொள்வதுண்டு
தன் பக்கத்தில்
இருக்கும் முருகன் ஏதோ சேட்டை செய்ய அவன் அருகில் இருந்த எனது அப்பா சந்திரசேகரன் மாட்டிக்கொண்டார். இதுவரை இவரை அதிர்ந்து
கூட பேசிடாத வாத்தியார்
அன்று வந்த கோபத்தின் காரணமாக என் அப்பா தான் அப்படி பேசி கலாட்டா செய்தது என்று தவறாக நினைத்து கண்டபடி ஏசிவிடார்.
செய்யாத தப்பிற்காக இப்படி திட்டு வாங்கிவிட்டோமே என்ற அவமானத்தோடு வாடிய முகத்தோடு வீடு வந்து சேர்ந்தார் அப்பா. ஓரிரண்டு நாட்கள் வகுப்புக்கு போகாமல் இருந்தார்..
செய்யாத தப்பிற்காக இப்படி திட்டு வாங்கிவிட்டோமே என்ற அவமானத்தோடு வாடிய முகத்தோடு வீடு வந்து சேர்ந்தார் அப்பா. ஓரிரண்டு நாட்கள் வகுப்புக்கு போகாமல் இருந்தார்..
தன் மகன்
தன்னிடம் கோபம் கொண்டிருந்தால் எவ்வளவு வருத்தப்படுவாரோ? அவ்வளவு வருத்தபட்டிருகிறார்
அந்த வாத்தியார். வகுப்பில் கவன சிதறல் ஏற்படும் நிலைக்கு இந்த சம்பவம் அவரை வருந்தவைத்திருகிறது.
இன்றும் என் தந்தையின் நினைவில் இந்த சம்பவம் நீங்காத இடம் பிடித்திருக்கவேண்டும் என்றால், இதற்கு என்ன காரணம் என்று என் மனம் யோசிக்கத் தொடங்கியது.
இன்றும் என் தந்தையின் நினைவில் இந்த சம்பவம் நீங்காத இடம் பிடித்திருக்கவேண்டும் என்றால், இதற்கு என்ன காரணம் என்று என் மனம் யோசிக்கத் தொடங்கியது.
புராண காலங்களில் தனக்கான ஒரு குருவை தேடி சிஷ்யன் செல்வது
வழக்கம். ஆனால் என் மனதளவில் அந்த வழக்கத்தையே புரட்டிபோட்ட சம்பவம் இது. தனது
வகுப்பில் ஏராளமான மாணவர்கள் இருக்க எல்லோரையும் தாண்டி எனது தந்தை வகுப்பிற்கு
வராத வெறுமையை அவரால் தாங்க முடியவில்லை. வகுப்பு முடிந்தது தான் தாமதம், நேராக
எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். முற்றத்தில் துணிகளை துவைத்து கொண்டிருந்த
எனது பாட்டியிடம் சந்திரசேகரன் ரெண்டு நாளா collegeக்கு வரலே, அதான் வந்து
பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்றார்.
தனது பிள்ளையை தேடி வாத்தியார் வீட்டிற்கே வந்தது பாட்டிக்கு
ஒரே சந்தோஷம். டேய் சந்துரு உங்க வாத்தியார் வந்திருக்கார் பார் என்று
சொல்லிவிட்டு. வாத்தியாரை வீட்டிற்குள் வரவேற்று அமரசெய்தார். என் தந்தை குனிந்த
தலை நிமிராமல் வாத்தியாரின் பக்கத்தில் வந்து நின்றார். என்னடா நீ பெரிய மனிஷனா
ஆய்டியா என்றார். அப்போது நிமிர்ந்த என் தந்தையிடம், டேய் அந்த முருகன் தான்
பேசினான்னு எனக்கு அப்போ தெரியாது டா, என்ன மன்னிச்சிடு உன்ன தெரியாம
திட்டிட்டேன்.
நீங்க எவ்ளோ தப்பு பண்றீங்களே நான் உங்ககிட்ட கோச்சுகிட்டு
இப்படிய வகுப்புக்கு வராமலா இருக்கேன்? நாளைலேந்து வகுப்புக்கு வந்திடுறியா? என்று
கேட்டுவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார்.
பாடம் சொல்லித்தரும் வாத்தியார்களுக்கு மத்தியில் இவர் ஒரு
பாடமாகவே இருந்திருக்கிறார்.
என் தந்தையும் ஒரு சிறந்த கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு
பெற்றவர். 65 வயதில் தனது கல்லூரி நாட்களை பின்னோக்கி பார்த்தபோது ஏற்படும்
ஞாபகங்களில் இந்த ஆசிரியரின் நினைவே முதன்மை பெறுகின்றது.
அவரோடு சேர்ந்து எனது கண்களும் பனித்தன. என்னுடைய கல்லூரி
நாட்களை நினைவு கோர்ந்த படி...
